தென்காசி மாவட்டம், இருப்புப் பாதை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணி செய்பவர், சரவணன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருச்சி ரயில்வே காவல் நிலையத்தில் பணிபுரிந்தார்.
அப்போது, அவருக்குக் கீழ் பணிபுரியும் திருமணம் ஆகாத பெண் காவலர் ஒருவரிடம் அலைபேசியில் ஆபாசமாகப் பேசியுள்ளார். வார்த்தைகள் மூலம் பெண் காவலரை, தனது ஆசைக்கு இரையாக்க முயற்சி செய்துள்ளார். இருப்பினும், பெண் காவலர் கடைசி வரை மறுத்துவிட்டு, திரும்ப அழைப்பதாகக் கூறி, அலைபேசியின் இணைப்பைத் துண்டித்துள்ளார். இதுதொடர்பாக பெண் காவலர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.