இந்தப் போராட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
தென்காசியில் பள்ளிகளை திறக்கக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்! - school teachers federation of india
தென்காசி: சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி தென்காசி முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
![தென்காசியில் பள்ளிகளை திறக்கக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்! teachers protest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8309832-690-8309832-1596646383624.jpg)
teachers protest
மருத்துவரின் ஆலோசனைப் பெற்று சுழற்சி முறையில் பள்ளிகளை திறப்பதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஏராளமான ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
இந்தப் போராட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.