தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசி- பிணத்தின் தலையுடன் சாமியாட்டம்- போலீஸ் விசாரணை! - Samiyattam with a rotten human head

பாவூர்சத்திரம் அருகே பிணத்தின் தலையுடன் சாமியாடியவர்கள் உள்பட 10 பேர் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

Tenkasi: Samiyattam with a rotten human head- Police Investication
Tenkasi: Samiyattam with a rotten human head- Police Investication

By

Published : Jul 27, 2021, 7:18 AM IST

Updated : Jul 27, 2021, 7:42 AM IST

தென்காசி : பாவூர்சத்திரம் அருகேயுள்ள கல்லூரணி கிராமத்தில் சக்திபோத்தி மாடசாமி கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் வெள்ளியில் திருவிழா கொண்டாடுவது வழக்கம்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கோயில் திருவிழாவில் பிணத்தின் தலையை வைத்து சாமி ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஆடி முதல் வெள்ளி கொடைவிழா

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கல்லூரணி கிராமத்தில் சக்திபோத்தி மாடசாமி என்ற கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் வெள்ளியில் திருவிழா கொண்டாடுவது வழக்கம்.

பிணத்தின் தலையுடன் சாமியாட்டம்- போலீஸ் விசாரணை!

அதன்படி இந்த ஆண்டும் வெள்ளி அன்று (ஜூலை 24) கொடை விழா தொடங்கியது. இக்கொடை விழாவின் சிறப்பம்சமே சாமி ஆடுபவர்கள் வேட்டைக்கு சென்று இடுகாட்டில் உள்ள பிணத்தின் தலையை வெட்டி எடுத்து அதனை அரிவாள்களில் குத்திக்கொண்டு கோயிலுக்கு வந்து நிறைவு செய்வதுதான்.

அழுகிய தலையுடன் சாமியாட்டம்

அதன்படி திருவிழாவில் சாமி பூஜையின் போது சாமி ஆடுபவர் பிணத்தின் தலையை கொண்டு வந்து கோயில் முன்பு ஆடினர். இது, கல்லூரணி ஊர் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பார்க்கப்பட்டது.

தென்காசி- பிணத்தின் தலையுடன் சாமியாட்டம்- போலீஸ் விசாரணை!

இந்தத் திருவிழாவை காண பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தனர். கரோனா கட்டுப்பாடு விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன.

7 பிரிவுகளின் கீழ் வழக்கு

இது தொடர்பாக காவலர்கள் கோயில் நிர்வாகிகள் மற்றும் சாமி ஆடுபவர்கள் என 10 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் சாமியாடியவர்களின் கைகளில் இருந்த தலை, உண்மையான மனித தலையா? அல்லது போலியா? என்பது குறித்தும் விசாரணை நடத்திவருகிறார்கள்.

இதையும் படிங்க : முனியப்பன் சாமி சிலைக்கு தீ - காவல் துறையினர் விசாரணை!

Last Updated : Jul 27, 2021, 7:42 AM IST

ABOUT THE AUTHOR

...view details