தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார்மயமாக்கலைக் கண்டித்து ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசி: இந்திய ரயில்வே போக்குவரத்தைத் தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து செங்கோட்டை ரயில் நிலையம் முன்பு 100க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி
தென்காசி

By

Published : Jul 15, 2020, 5:33 PM IST

இந்தியாவில் கரோனா பாதிப்பு ஒருபுறம் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் சூழலில், அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பைச் சரிசெய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுவருகிறது. அதற்காக பல பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய அரசு முடிவு செய்திருந்தது.

அந்த வகையில், தற்போது 150 வழித்தடங்களில் பயணிகள் ரயில் போக்குவரத்தில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் வகையில், தகுதிவாய்ந்த நிறுவனங்கள் விண்ணப்பம் செய்வதற்காக ரயில்வே அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும் மத்திய அரசு ஊழியர்களும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையம் முன்பு ரயில் போக்குவரத்தைத் தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சியைக் கண்டித்தும், ரயில்வே துறையில் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வலியுறுத்தியும், சரக்குப் போக்குவரத்தை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பதைக் கண்டித்தும் தென்காசி ரயில்வே கோட்ட சங்கத் தலைவர் ஷாபு தலைமையில் 100க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் தகுந்த இடைவெளியுடன் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details