தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த கல்லூரி தாளாளர் தலைமறைவு.. தென்காசியில் கொடூரம் - nursing college Secretary gave sexual harassments

பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்த கல்லூரி தாளாளர் கைது செய்யப்பட்ட நிலையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்த கல்லூரி தாளாளர் தலைமறைவு! தேடும் பணியில் போலீஸ் தீவிரம்..
பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்த கல்லூரி தாளாளர் தலைமறைவு! தேடும் பணியில் போலீஸ் தீவிரம்..

By

Published : Jun 10, 2023, 11:04 AM IST

தென்காசி: ஆசாத் நகரில் தனியாருக்குச் சொந்தமான நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த சூழலில், இந்த கல்லூரியில் பயின்று வரும் 17 வயதான மாணவி ஒருவர், தனது குடும்பத்தினருடன் வந்து குற்றாலம் காவல் நிலையத்தில் கல்லூரி குறித்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், தான் டிப்ளமோ ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் என்ற பிரிவில் 2ஆம் ஆண்டு நர்சிங் படித்து வருவதாகவும், தன்னுடைய கல்லூரி தாளாளரான முகமது அன்சாரி (45) என்பவர் தனக்கும், தன்னுடன் பயின்று வரும் சக மாணவிகளுக்கும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் வழங்கி வருவதாகவும், மேலும் தன்னை தனியாக அழைத்து ஆபாசமாக பேசியதாகவும் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது. கல்லூரி தாளாளரான முகமது அன்சாரி, கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளிடம் ஆபாசமான முறையில் பாலியல் உணர்வை தூண்டும் வார்த்தைகளை தொடர்ந்து பேசியதும், ஒவ்வொரு மாணவியாக தனியாக அழைத்து பாலியல் ரீதியான தொந்தரவுகளை கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.

மேலும், இது பற்றி கல்லூரி மாணவிகள் வீட்டிலோ, வேறு சக மாணவகளிடமோ கூறினால், அவர்களது மதிப்பெண்ணில் கை வைத்து விடுவேன் எனவும், ‘எப்படி நீ சான்றிதழ் வாங்குகிறாய் என பார்க்கிறேன்’ எனவும் மிரட்டி வந்ததும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, கிராமங்களில் இருந்து இந்தக் கல்லூரிக்கு பயில வரும் கிராமத்து மாணவிகள், தான் எப்படியாவது படித்துவிட்டு வெளியே சென்றால் போதும் என நடந்ததை எல்லாம் வெளியே கூறாமல் மறைத்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இதனை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு மாணவி தற்போது அளித்துள்ள இந்த புகாரால், குறிப்பிட்ட இந்த தனியார் கல்லூரியில் நடைபெற்று வந்த பாலியல் ரீதியான தொந்தரவுகள் தற்போது வெளி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த முகமது அன்சாரி வாரந்தோறும் திங்கட்கிழமை தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் கூட்டத்திற்கு சென்று, அதிகாரிகள் மற்றும் அங்கு வருபவர்களுக்கு வருகை பதிவேடு மற்றும் சானிடைசர் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை செய்ய இக்கல்லூரியின் பயின்று வரும் மாணவர்களை பயன்படுத்தியுள்ளார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தனக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களை ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் உட்படுத்தியுள்ளார். மேலும் குறிப்பாக, படித்து தனது குடும்பத்தை எப்படியாவது முன்னேற்றி தனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என நினைக்கும் கல்லூரி பிள்ளைகளை குறிவைத்து ஆபாச வார்த்தைகளை பேசி உள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தற்போது இந்த விவகாரத்தில் கல்லூரியின் முதல்வர் மற்றும் மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய காவல் துறையினர் முயன்றபோது, முகமது அன்சாரி தப்பிச் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, தப்பிச் சென்ற அவரை காவல் துறையினர் பல்வேறு இடங்களில் தேடும் பணியில் ஈடுபட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:Maharastra: 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு; 4 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details