தென்காசி ஆரம்ப கட்டத்தில் கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாகவே இருந்துவந்தது. இச்சூழலில் புளியங்குடி பகுதியில் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு முழு கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மருத்துவருக்கு கரோனா: தனிமைப்படுத்தப்பட்ட செவிலியர்கள்
தென்காசி: ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் பெண் மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் பணியாளர்கள், செவிலியர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து ஊரடங்கு தளர்வால் சென்னை, வெளி மாநிலங்களிலிருந்து மக்கள் தென்காசிக்கு திரும்பியதன் காரணமாக மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 100ஐ தாண்டியது. இதில் 80க்கும் மேற்பட்டவர்கள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் தென்காசி நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் பெண் மருத்துவர்க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் 15க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 115ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க:கரோனா இறப்புகளை அரசு மறைக்கிறது - அறப்போர் இயக்கம் பகிரங்க குற்றச்சாட்டு!