தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 21, 2020, 10:34 AM IST

ETV Bharat / state

பொதுமக்களிடையே அதிகரிக்கும் கரோனா அச்சம்! மனிதாபிமானம் இழக்கும் மக்கள்!

தென்காசி: கரோனா பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று வந்த நபர்களை பாவூர்சத்திரத்தில் தனிமைப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

தென்காசி
தென்காசி

நாடு முழுவதும் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை கரோனாவால் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கரோனா குறித்த அச்சம் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்டோர், திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் உள்ள உறவினர் இல்லத்துக்குச் சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், மேலப்பாளையம் பகுதியில் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளதால் அங்கு சென்றுவந்த கடையநல்லூரைச் சேர்ந்தவர்களை தனிமைப்படுத்த சுகாதாரத் துறையினர் திட்டமிட்டதாக தெரிகிறது.

வெளியூர் சென்றுவந்த நபர்களை தனிமைப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்

அதன்படி, ஆலங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தனிமைப்படுத்த முயன்றபோது அப்பகுதிமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களை அங்கிருந்து அழைத்து வந்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்க வைக்க முயற்சி செய்தனர்.

இதற்கிடையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பாலிடெக்னிக் கல்லூரியில் தங்க வைக்க முயற்சி செய்ததாக பாவூர்சத்திரம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு தகவல் சென்றது. இதை கேள்விப்பட்டு பல்வேறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் பாலிடெக்னிக் கல்லூரி முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்

மேலப்பாளையம் சென்றவர்களை இங்கே தங்க வைப்பதன் மூலம் தங்கள் பகுதியில் கரோனா பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, உடனடியாக அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தகவலறிந்து சம்வ இடத்துக்குச் சென்ற ஆலங்குளம் காவல்துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், போராட்டத்தை கைவிட மறுத்ததால் வேறுவழியின்றி தனிமைப்படுத்தபட வேண்டிய நபர்களை தென்காசி பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.

வெளியூர் சென்றுவந்த நபர்களை தனிமைப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்

அதன்பிறகே பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர். இச்சம்பவத்தால் பாவூர்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதையும் பார்க்க:இந்தியாவில் கரோனா தொற்று இரட்டிப்பாக 7.5 நாள்கள் ஆகிறது: மத்திய அரசு!

ABOUT THE AUTHOR

...view details