தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசியில் புதிய போக்குவரத்து காவல் நிலையம் திறப்பு

தென்காசி மாவட்டத்தில் புதிய போக்குவரத்து காவல் நிலையம் திறக்கப்பட்டதை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், தென்காசி நகர் பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட இருவேறு வழக்குகளிலும் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தென்காசி
தென்காசி

By

Published : Oct 5, 2020, 7:36 PM IST

தென்காசி:நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்டு ஓராண்டை கடந்துள்ளது. புதிய மாவட்டமாக உருவானதையடுத்து, மாவட்ட நிர்வாகத்திற்கு தேவையான கட்டடங்களுக்கு இடம் தேர்வு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கண்காணிக்கும் வகையில் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய போக்குவரத்து காவல் நிலைய கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

குத்து விளக்கு ஏற்றி வைத்த எஸ்பி சுகுணா சிங்

இதனையடுத்து புதிய போக்குவரத்துக் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது, " மாவட்டம் புதியதாக உருவாகியுள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலை கண்காணிக்கும் பொருட்டு நகர் பகுதியில் போக்குவரத்து காவல் நிலையம் அமைக்கப்பட்டிருப்பது காவலர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது.

தென்காசியில் புதிய போக்குவரத்து காவல் நிலையம் திறப்பு

மேலும் மாவட்டத்தின் நகர் பகுதியில் பட்டப்பகலில் நடைபெற்ற இருவேறு கொள்ளைச் சம்பவங்களிலும் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம், இன்னும் ஓரிரு தினங்களில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்" என்று கூறினார்.

இதையும் படிங்க:தொடர்ந்து அத்துமீறுகிறதா காவல்துறை? - நடவடிக்கை எடுக்க வலுக்கும் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details