ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே மயில் தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கோபல சுந்தர்ராஜ், '2012ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் ஐந்தாவது இடத்தில் வெற்றிபெற்றார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண் இணை இயக்குநராக பணியாற்றி வந்தார்.
தென்காசி மாவட்ட ஆட்சியராக கோபால் சுந்தர்ராஜ் பொறுப்பேற்பு - தென்காசி புதிய ஆட்சியர்
தென்காசி மாவட்ட ஆட்சியராக கோபால சுந்தர்ராஜ் இன்று (ஜூன் 17) பொறுப்பேற்றுக்கொண்டார்.
தென்காசி மாவட்ட மூன்றாவது ஆட்சியராக கோபால் சுந்தர்ராஜ் பதவியேற்பு
இந்நிலையில தென்காசி மாவட்ட புதிய ஆட்சியராக கோபால் சுந்தர்ராஜ் நியமிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்த தென்காசி மாவட்ட 3 வது ஆட்சியராக கோபால் ராஜ் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
சில நாள்களுக்கு முன்பு தென்காசி மாவட்ட புதிய ஆட்சியராக சந்திரகலாவை அறிவித்திருந்த நிலையில், நேற்று (ஜூன் 16) ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக அறிவிக்கபட்டிருந்த கோபால் சுந்தர்ராஜ் தென்காசி மாவட்ட ஆட்சியராக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.