தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாரிதாஸ், கிஷோர் சுவாமி மீது நடவடிக்கை கோரி  மனு - தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மாரிதாஸ் மீது இஸ்லாமியர்கள் புகார்

தென்காசி: மாரிதாஸ், கிஷோர் சுவாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரிடம் மனு
மாவட்ட ஆட்சியரிடம் மனு

By

Published : Jul 16, 2020, 9:56 PM IST

சமூக வலைத்தளங்களில் மாரிதாஸ், சுரேந்திர குமார், கிஷோர் சுவாமி, சிவனடியார், கல்யாணராமன் ஆகியோர் முஹம்மது நபிகள் பற்றி இழிவாக பேசியும், இரு மதத்தினரிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் விஷம கருத்துகளை பரப்பியும் காணொலிகள் வெளியிட்டுள்ளனர்.

இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக பேசிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி அனைத்து மாவட்டங்களிலும் இஸ்லாமியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட அனைத்துக்கட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக மாரிதாஸ், சுரேந்திர குமார், கிஷோர் சுவாமி, சிவனடியார், கல்யாணராமன் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுகுணாசிங்டம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கருப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலைச் சேர்ந்த நிர்வாகி கைது!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details