தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கானாவூரில் சாலையை சீரமைக்க மக்கள் வேண்டுகோள் - tenkasi road issues

தென்காசி: கானாவூர் அருகே நான்கு மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலை சீரமைப்பு பணிகளை தொடர விவசாயிகள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கானாவூரில் சாலையை சீரமைக்க மக்கள் வேண்டுக்கோள்
கானாவூரில் சாலையை சீரமைக்க மக்கள் வேண்டுக்கோள்

By

Published : May 29, 2020, 9:07 PM IST

தென்காசி மாவட்டம் தென்காசி - அம்பை தேசிய நெடுஞ்சாலை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கானாவூர் கிராமம். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

மாடு மேய்ப்பது, விவசாயம் ஆகியவை தான் இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நெடுஞ்சாலையில் இருந்து கானாவூர் செல்லும் வழியில் சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை மிகவும் மோசமானதாக சேதம் அடைந்து காணப்பட்டது.

அச்சாலையை திரும்ப போட்டுத் தரும்படி பொதுமக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்ததன் பேரில், ஒரு வழியாக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இந்த கானாவூர் பகுதிக்கு சாலையை சீரமைக்கும் பணிகள் தொடங்கின.

ஆனால், கரோனோ ஊரடங்கு காரணமாக திடீரென சாலைபோடும் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதனால் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கும் சாலையில் செல்லமுடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். இதற்கிடையில், தற்போது ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் கிடப்பில் போடப்பட்ட அரசு திட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சாலை போடும் பணிகள் பல இடங்களில் நடந்து வருகிறது.

ஆனால், கானாவூர் செல்லும் வழியில் கிடப்பில் போட்ட சாலைப் பணிகளை மட்டும் அலுவலர்கள் இன்னும் தொடங்கவில்லை. தொடர்ந்து இங்கு பணிகள் தாமதம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், மாடுமேய்க்கும் விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

குறிப்பாக இந்த வழியாகத்தான் தென்காசி மாவட்டத்தின் முக்கிய அணையான ராம நதி அணைக்கு செல்ல வேண்டும். மேலும் கானாவூர் வழியாக பல ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. எனவே, விவசாய நிலங்களுக்கு செல்லவேண்டிய விவசாயிகள், சாலையில் கருங்கற்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால் நடந்து செல்ல முடியாமல் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இது குறித்து கானாவூரை சேர்ந்த பொன்னுத்துரை கூறுகையில், "நான் ஆடுமேய்க்கும் தொழில் செய்து வருகிறேன் இந்த வழியாகத்தான் தினமும் வந்து செல்கிறேன். சாலை மிகவும் மோசமாக உள்ளதால் சிரமமாக இருக்கிறது. இந்த வழியாக அதிகமான வாகன ஓட்டிகளும் செல்கின்றனர். மேலும் அணை பகுதியில் ஆடு மேய்க்க எங்களுக்கு சில தனியார் நில உரிமையாளர்கள் அனுமதி மறுக்கின்றனர். இந்த சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. எனவே, சாலையை சீரமைத்து அணைப் பகுதியில் ஆடு மேய்ப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:வீடு புகுந்து நகைப்பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details