தென்காசி:ஒரு தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும், எப்படி சிந்திக்க வேண்டும், யாருக்கு திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும், நாளைய தலைமுறைக்கு எது பலன் தரும் என்று ஆராய்ந்து எப்படி செயல் பட வேண்டும் என்பதற்கான உதாரணம் தான் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் என பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக நமது சமூதாயத்திற்கு கல்வி எந்த அளவு தேவை என்பதை உணர்ந்து செயல்பட்டதால் தான் இவர் கல்வி கந்த்றந்த காமராஜராக போற்றப்படுகிறார்.
முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 121வது பிறந்த நாளை பல்வேறு இடங்களில் பெரும்பாலான மக்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில்தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள இனாம்கோவில்பட்டி கிராமத்தில் 1200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை கோயில் திருவிழாவைப் போல் கொண்டாடி வழிபாடு செய்கின்றனர்.
காலை முதல் ஒவ்வொருவருக்கும் இனிப்பு வழங்கியும் மதியம் 12 மணி முதல் 4 மணி வரை சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து மக்களை வரவழைத்து 2000 பேருக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். அதைப்போல் சிறுவர்களுக்கு சிலம்பாட்டம், கோல போட்டி, பெண்களுக்கான கயிறு இழுக்கும் போட்டி, ஆண்களுக்கான கபடி போட்டி, சிறுவர் சிறுமிகளுக்கான போட்டிகளும் நடத்தப்பட்டு போட்டிகளில் வென்ற மக்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கமூட்டுகின்றனர்.