தென்காசி: ஊத்துமலை அருகே உள்ள ஆர்.சி.கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் ஷாலோம் ஷீபா (19). அதே ஊரைச் சேர்ந்தவர் முத்துராஜ் (22) கூலித்தொழிலாளி. முத்துராஜ், ஷீபா இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களது காதலுக்கு ஷீபா வீட்டில் எதிர்ப்பு கிளம்பவே கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு வீட்டிற்குத் தெரியாமல் இருவரும் திருமணம் செய்துள்ளனர். தொடர்ந்து, ஒரே ஊரில் வசித்தாலும் பெற்றோரின் கோபத்தால் தனது தாய் வீட்டிற்கு ஷீபா செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன் தினம் (ஜூன்.29) கோயில் திருவிழாவிற்கு சென்ற முத்துராஜ் - ஷீபா இருவரும் அதிகாலை சாமக்கொடை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கோயில் சென்று திரும்பும் வழியில் தாய் வீட்டிற்கு செல்வதாகக் கூறி ஷீபா சென்றுள்ளார்.