தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"குளத்த காணோம், கண்டு பிடிச்சு கொடுங்க"- தென்காசி விவசாயிகள் கோரிக்கை - தரகுளத்தை காணோம்

தென்காசி மங்களாபுரம் கிராமத்தில் குளம் மற்றும் கால்வாய்களை காணவில்லை எனவும் அதனை மீட்டு தர வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தென்காசி விவசாயிகள் கோரிக்கை
தென்காசி விவசாயிகள் கோரிக்கை

By

Published : Mar 13, 2023, 12:47 PM IST

தென்காசி விவசாயிகள் கோரிக்கை

தென்காசி:தென்காசி மாவட்டம் என்றாலே விவசாயத்திற்குப் பேர் போன இடமாகும். மேலும் இந்த மாவட்டத்தில் அதிக கிராமங்கள் உள்ளது. இங்குள்ள பொதுமக்கள் தங்களுடைய தினசரி வேலையாகவே விவசாயப் பணியைச் செய்து வருகின்றனர். பட்டதாரி முதற்கொண்டு விவசாயப் பணியைச் செய்து வருகிறார்கள்.

புளியங்குடி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், சிவகிரி ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் அந்தப் பகுதியின் உடைய ஏரி, குளங்களை நம்பியை விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மழைக்காலங்களில் குளங்களை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் ஏராளமான விவசாயிகள் உள்ளனர்.

குறிப்பாக கடையநல்லூர் அடுத்து மங்களபுரம் கிராமத்தில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. அப்பகுதியில் 600க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவசாய நிலங்களுக்குப் பாசனமானது பன்னீர் பெரியகுளம் வழியாகப் பாசன வசதி பெறுகிறது.

இந்நிலையில் பன்னீர் பெரியகுளமானது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குளத்திலிருந்து விவசாய நிலத்திற்குத் தண்ணீர் செல்லக்கூடிய கால்வாயும் ஆக்கிரமிப்பு நடந்துள்ளது. இவ்வாறு ஆக்கிரமிப்பு காரணமாக வருங்காலங்களில் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.

தற்போது பாசன வசதி பெறக்கூடிய பன்னீர் பெரிய குளத்தைக் காணவில்லை என வடிவேல் பாணியில் விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு அதிகாரிகளிடம் முறையாகப் பல மாதங்களாக மனு கொடுத்தும், தற்பொழுது வரை நடவடிக்கை எடுக்கப்படாததால் விவசாயிகள் பெரிதும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஊரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளத்தைக் காணவில்லை எனவும் விவசாயிகள் போஸ்டர் அடித்ததால் அதுவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழக அரசு கவனத்தில் கொண்டு தங்களது வாழ்வாதாரமான விவசாயப் பணிகளை மேற்கொள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள குளத்தை மீட்டுத் தர வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பொதுத் துறை வங்கிகள் தனியார் மையம்? - பஞ்சாப் நேஷனல் வங்கி மாநாட்டில் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details