தென்காசி: காய்கறியை விரும்பி உண்பர்களால் கூட அதிகம் கண்டுகொள்ளப்படாத காயான பீர்க்கங்காய் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அதிகப்படியாக மகசூல் செய்யப்படுகிறது. இந்த பீர்க்கங்காய் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகளை தருகிறது. அதில் மிகவும் முக்கியமானது உடல் எடை இழப்பு. உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் பீர்க்கங்காயை தவறாமல் உணவில் சேர்த்து வரலாம்.
மேலும் உங்கள் உடல் எடையை குறைத்து ஒரு ஆரோக்கியமான சருமத்தை நீங்கள் பெற விரும்பினால் அதற்கு பீர்க்கங்காய் உங்களுக்கு ஒரு நல்ல பலனை தரும். குறைந்த கலோரியை கொண்ட காயான பீர்க்கங்காய் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
வைட்டமின் சி, துத்தநாகம், இரும்பு, ரிபோஃப்ளோவின், மெக்னீசியம், தயாமின் உள்ளிட்ட அனைத்துச் சத்துகளும் இதில் உள்ளன. தோல் சம்பந்தமான அனைத்து கோளாறுகளுக்கும் பீர்க்கங்காய் நல்ல தீர்வை கொடுக்கக் கூடியது. இதன் இலைகளும் மருத்துவ குணம் உடையவை. கண்ணில் ஏற்படும் வலிகள் மற்றும் வீக்கத்திற்கு பீர்க்கங்காய் இலைகளின் சாற்றை போடுவதன் மூலம் விரைவில் குணமடையும்.
சிறுநீரக கோளாறுகளுக்கு நன்கு முற்றிய பீர்க்கங்காய் பயன்படுத்தபடுகிறது. பீர்க்கங்காயை சரிவர உணவில் எடுத்து கொள்ள அதிக படியான காய்ச்சல், சளி தொல்லை, இருமலால் அவதிப்படுபவர்களுக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. ரத்த சோகையில் இருந்து விடுபடுவதற்கும் பீர்க்கங்காயை சாப்பிட்டு வரலாம். பீர்க்கங்காயின் பழங்களும் நன்மை தர கூடியதே. அதை வாந்திக்கு பயன்படுத்தலாம். சுவாச கோளாறுகளுக்கும் அது அரு மருந்து.
மண்ணீரலில் ஏற்படும் புண்களை குணப்படுத்த பீர்க்கங்காயின் சாற்றை அதில் போடுவதன் மூலம் விரைவில் குணம் அடையும்.
உடலில் இருக்கும் எண்ணெய் சருமத்திற்கு இதனை பயன்படுத்த நல்லது. இதில் அடங்கி இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.