தென்காசி:புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழ்நாடு - கேரள எல்லையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் நேற்று (ஜன 16) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்நாட்டிற்குள் வராமல் தடுக்க, பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கரோனா சோதனை சாவடி மையம் மற்றும் அங்கு நடத்தப்படும் சோதனை முறை குறித்து காவலர்களிட்ம் அவர் கேட்டறிந்தார்.