குடற்புழுவால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளைத் தடுப்பதற்காக ஆண்டுதோறும் 1 முதல் 19 வயதுடைய அனைத்து நபர்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகளை தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இந்த மாத்திரையை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு குடற்புழுவால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு தடுக்கப்படும். அதனால் குழந்தைகள் ஆரோக்கியமாக நன்கு வளருவதுடன் படிப்பிலும் ஆர்வம் காட்ட இயலும்.
குடற்புழு நீக்க மாத்திரை வழங்கிய மாவட்ட ஆட்சியர் - மாணவர்கள்
தென்காசி: மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தொடங்கி வைத்தார்.
அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ள அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகள் என 3 லட்சத்து 60 ஆயிரம் நபர்களுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரைகள் இலவசமாக வழங்குவதற்கான தொடக்க நிகழ்ச்சி நகராட்சிக்கு உட்பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி தொடங்கி வைத்தார். மேலும் நிகழ்ச்சியில் சுகாதார பணி இணை இயக்குனர் சிவலிங்கம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயசூர்யா, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.