தென்காசி: தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாள்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன.
மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதனால் வரும் ஞாயிற்று கிழமை வரை அனைத்து அருவிகளுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.