குடியிருப்புகளை சூழும் வெள்ளம் தென்காசி:குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல சுழற்சி நிலவும் காரணத்தால், வரும் 22ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் எனவும், குறிப்பாக, தென் மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த டிச.16 ஆம் தேதி முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து மழை பெய்து வரும் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரவு முழுவதும் பெய்த மழையின் காரணமாக சங்கரன்கோவில் - புளியங்குடி செல்லும் சாலையில் உள்ள கோவிந்த பேரி தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இன்று (டிச.18) தென்காசி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து, தென்காசி மாவட்ட மக்களுக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன், பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் அடங்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில்,
- பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
- நீர்நிலைகளுக்கு சென்று குளிக்க வேண்டாம்.
- நீர்நிலைகளுக்கு ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம்.
- தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
- குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கினால் மாவட்டத்திலுள்ள பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் தங்கிக் கொள்ளலாம்.
- மேலும் 24 மணி நேரமும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மழைக்காலங்களில் பெயரிடர் குழு அறிவிப்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:தென்காசியை மிரட்டும் மழை.. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு..