தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர்களின் மன அழுத்தத்தை சரிசெய்ய யோகா பயிற்சி! - tenkasi police commissioner suguna singh

தென்காசி: கரோனா காலத்தில் அயராது உழைக்கும் காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக மாவட்ட எஸ்பி சுகுணா சிங் முன்னிலையில் யோகா பயிற்சி நடைபெற்றது.

tenkasi
tenkasi

By

Published : Jul 11, 2020, 2:41 AM IST

தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றனர். இதனால், அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் வகையில் யோகா பயிற்சி தமிழ்நாடு முழுவதும் காவலர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, தென்காசி மாவட்டத்தில் காவலர்களுக்கு மன அழுத்தத்தை நீக்கும் வகையில் மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட யோகப் பயிற்சிகள் தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

இதில், பெண் காவலர்கள் உள்பட ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர். இந்த யோகா பயிற்சிக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுனா சிங் தலைமை வகித்தார்.

அப்போது, காவலர்கள், உதவி ஆய்வாளர்கள் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: பல தரப்புக்கும் இது கடினமான நேரம்'- சசி தரூர்

ABOUT THE AUTHOR

...view details