தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனநல காப்பகத்தில் மாஜி விஏஓ மகன் துன்புறுத்தப்பட்டதாக புகார்: ஆட்சியர் அதிரடி நடவடிக்கை! - குருகுலம் மனநலம் காப்பகத்திற்கு சீல் வைப்பு

மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் விஏஓ-வின் மகன் துன்புறுத்தப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் காப்பகத்திற்கு சீல் வைத்து மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

seal in Vaidya salai on ex VAO son harassed complaint issue
மனநல காப்பகத்தில் மாஜி விஏஓ மகன் துன்புறுத்தப்பட்டதாக புகார்

By

Published : Aug 12, 2023, 12:39 PM IST

முன்னாள் விஏஓ-வின் மகன் துன்புறுத்தப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் காப்பகத்திற்கு சீல்

தென்காசி:சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்). இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ள சூழலில், இவர்களின் கடைசி மகன் உமாமகேஸ்வரன் (வயது 36) என்பவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, சிகிச்சைக்காக குற்றாலம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு சித்த வைத்திய மனநல காப்பகத்தில் உமாமகேஸ்வரனை, அவரது தந்தையான முன்னாள் விஏஓ சேர்த்து உள்ளார்.

கடந்த 9 வருடங்களுக்கு மேலாக இந்த சித்த வைத்திய சாலையில், சிகிச்சை பெற்று வரும் உமாமகேஸ்வரனை, கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது தந்தை ஆறுமுகம் பார்க்க சென்று உள்ளார். அப்போது, உமாமகேஸ்வரன் மெலிந்த உடல் எடையில், உடலில் பல்வேறு தீக்காயங்கள் மற்றும் கொப்புளங்களுடன் வேதனைப்பட்டு வந்துள்ளார்.

அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை ஆறுமுகம், உடனே உமாமகேஸ்வரனை அழைத்து வந்து தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளார். தற்போது, உமா மகேஸ்வரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில், மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த ஒரு நபர் அங்குள்ள ஊழியர்களால் துன்புறுத்தப்பட்டதாகவும், சூடு வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இதே காப்பகத்தில் 13 பேருக்கு மேல் தற்போது மனநல சிகிச்சை பெற்று வரும் சூழலில், அவர்களுக்கும் இதே போன்ற நிலை ஏற்பட்டுள்ளதாக உமாமகேஸ்வரன் தற்போது கூறியுள்ள நிலையில், இது தொடர்பாக தென்காசி வட்டாட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில், இது தொடர்பாக தென்காசி வட்டாட்சியர், குருகுலம் மனநல காப்பகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட போது, அரசின் அனுமதி பெறாமல் அந்த காப்பகம் இயங்கி வந்தது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அதற்கு சீலிட்டு அந்த காப்பகத்தை மூட மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்த நிலையில், அந்த மனநல காப்பகத்தில் இருந்த 12 நபர்களை வடகரை பகுதியில் செயல்பட்டு வரும் அன்பு முதியோர் இல்லத்திற்கு மாற்றம் செய்துள்ளனர்.

அதன் பின்னர் குருகுலம் மனநலம் காப்பகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதேபோல் தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள காப்பகத்திற்கு சரியான முறையில் அனுமதி வழங்கப்பட்டதா? இல்லையா? என மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: "வரலாற்று ஆய்வு நூலகம் இடமாற்றம் செய்யப்படாது" - JNU பதிவாளர் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details