தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வுசெய்த தென்காசி ஆட்சியர்! - Tenkasi District News

தென்காசி: மாவட்டத்தில் மொத்தம் 1,504 வாக்குச்சாவடிகள் தயாராக உள்ள நிலையில், ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற விகிதத்தில் உத்தரவு வழங்கப்பட்டால் மேலும் 450 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

election
election

By

Published : Dec 24, 2020, 2:23 PM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கியுள்ளன. அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேவையான வாக்கு இயந்திரங்கள் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து குற்றாலம் பராசக்தி கல்லூரி வாக்கு எண்ணும் மையம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் மேற்கொண்டார்.

தேர்தல் முன்னேற்பாடுகள்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவிக்கையில், “தென்காசி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் விதமாக தற்போது முதற்கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

மாவட்டத்திற்குத் தேவையான 3,260 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,490 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,650 வாக்கு சரிபார்ப்பு இயந்திரங்கள் ஆகியவை பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து மாவட்டத்தில் மொத்தம் 1,504 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளதாகவும், பிகார் மாநிலம் போன்று ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற விகிதத்தில் உத்தரவு வழங்கப்பட்டால் மேலும் 450 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்படும் எனவும் தொடர்ந்து தேர்தல் ஆணையம் வழங்கும் அறிவுரை அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: மதுரையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details