வேட்பாளர்களுடன் தேர்தல் அலுவலர் ஆலோசனைக் கூட்டம்!
தென்காசி: வாக்கு எண்ணிக்கை நாளில் மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் கடந்த 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்படவுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் மொத்தமாக நடந்து முடிந்த தேர்தலில் 72.58 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை மையங்களின் பாதுகாப்பு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் சமீரன் தலைமையில் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்ட திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் கலந்துகொண்டனர். வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், தொற்று காரணமாக எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: அப்போ கண்டெய்னர் இப்போ இதுதான்: அப்டேட் ஆன திமுக!