தென்காசி:தென்காசி மாவட்டத்தில் அதிகபடியான நெல் சாகுபடி செய்யப்படுவதால், நீர் ஆதாரமாக அப்பகுதியில் உள்ள குளங்கள் இருந்து வருகின்றன. குளங்களில் இருக்கின்ற நீர் மூலமாக பல்வேறு பகுதியில் உள்ள விவாசாய நிலங்கள் பயன்பெற்று வந்தது.
அதன்படி, புளியங்குடி அருகே உள்ள அருணாக்குளம் பகுதியில் சுமார் 100 ஏக்கருக்கு மேலாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள விவசாய நிலங்களுக்கு முக்கிய தண்ணீர் ஆதாரமாக அருணாக்குளம் மதகு இருந்து வந்தது. இந்த மதகு மூலம் ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளம், நெல் போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த வாரம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அனைத்து பகுதிகளிலும் உள்ள குளங்கள் நிரம்பின. மேலும், மழை அதிகரித்ததால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.