தென்காசி மாவட்டம் கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை (55). இவர் தனது வீட்டுக்கு அருகில் மாட்டு தொழுவம் வைத்து மாடுகளை பராமரித்து வருகிறார். இதனிடையே இவர் வீட்டிற்கு அருகில் வசித்துவரும் கொல்லி மாடசாமி (57) என்பவர், செல்லதுரையிடம் நிலம் தொடர்பாக மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்லத்துரை வீட்டுக்கு எதிரில் உள்ள மாட்டு தொழுவத்தில் மாடுகளுக்கு உணவை வைத்துவிட்டு ஓய்வு எடுத்தபோது அந்த நேரத்தில் மின்சாரத்தை துண்டித்து கொல்லி மாடசாமி உள்ளிட்ட சிலர் செல்லத்துரையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.