தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மான் உள்ளிட்ட வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டதாக 10 பேர் கைது!

தென்காசி: சிவகிரி மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் தொடர்ந்து மான் உள்ளிட்ட வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டு வந்த 10 பேரை வனத்துறையினர் கைதுசெய்தனர்.

மான் வேட்டையில் ஈடுபட்ட 10 பேர் கைது
மான் வேட்டையில் ஈடுபட்ட 10 பேர் கைது

By

Published : Feb 3, 2021, 4:50 PM IST

சிவகிரி மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக சிவகிரி வனச்சரகர் சுரேஷுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. குறிப்பாக தேவியார்பீட் பகுதியில் வேட்டைக் கும்பல் துப்பாக்கியுடன் சுற்றித் திரிவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து வனப்பகுதி முழுவதும் சுழற்சி முறையில் இரவு- பகல் நேரங்களில் வனத்துறையினர் மாறு வேடத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, தேவியார் பீட் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த மாடசாமி, அருண்குமார், பிரபாகர் ஆகிய மூன்று பேரை சுற்றிவளைத்த வனத் துறையினர் அவர்களை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்து ஒரு ஸ்கார்பியோ கார், இரண்டு இரு சக்கர வாகனங்கள், ஒரு நாட்டுத்துப்பாக்கி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த வனத் துறையினர், அவர்களுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

தொடர்ந்து இவர்களுடன் தொடர்புடைய மான் வேட்டை கும்பல்களை வனச்சரகர் சுரேஷ் தலைமையிலான வனத் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமர், சின்னராசு, செல்வம், சக்திவேல், இராஜேந்திரன், சன்னாசி, இராஜா, உள்பட ஏழு பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட மான், உடும்பு, காட்டுபன்றிகளை வேட்டியாடி வியபாரம் செய்ததாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 75 ஆயிரம் ரூபாய் அபராதம் வீதித்தனர். மேலும், கைது செய்த கும்பலிடம் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:'பீப் வேணும்' - ருசி தேடும் மைசூர் வன விலங்குகள்!

ABOUT THE AUTHOR

...view details