தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான தென் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்திபெற்ற அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயணசுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோயில் உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன், இக்கோயிலின் மிக முக்கியமான ஆவணங்களை கோயில் ஊழியர் நீலகண்டன் தீயிட்டு எரித்த படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதன்காரணமாக, ஆகஸ்ட் 27ஆம் தேதி கோயில் தாக்கர் பரஞ்சோதி, இவரைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.