தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து பாண்டியன் (51). இவர் இடைகால், சங்குபுரத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார்.
சாம்பவர் வடகரை அக்ரஹாரம் தெருவில் இவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி உஷாராணி(41), மகன்கள் விஷ்வா (14), வினித் (12) ஆகியோர் கடந்த சில நாட்களாக வேப்பங்குளத்தில் உள்ளனர். முத்து பாண்டியன் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார். இன்று காலை அவரது வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், முத்து பாண்டியனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.