தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியையொட்டி குண்டாறு நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கமானது 36 அடி கொள்ளளவு கொண்டது. தென்மேற்கு பருவமழை காரணமாக குண்டாறு நீர்த்தேக்கம் அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்டது. இந்நிலையில் அப்பகுதி சுற்றுவட்டார மக்கள் விடுமுறை நாட்களில் கரோனா தொற்று தடை உத்தரவை மீறி குண்டாறு நீர் வழித்தடங்களில் சென்று குளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று(நவ .1) மாலை செங்கோட்டை சேர்ந்த கீழபள்ளிவாசல் பகுதியை சேர்ந்த நாவஸ் என்பவரின் மகன் ஜிப்ரின் (15) என்பவர் தனது நண்பர்களுடன் குண்டாறு நீர்த்தேக்கம் பகுதியில் குளிக்க சென்றுள்ளார். நீர்த்தேக்கத்தில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த சிறுவன் ஜிப்ரின் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.