தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜம்முவில் உயிரிழந்த தமிழ்நாடு ராணுவ வீரர்: உடல் சொந்த ஊருக்குவருவதில் தாமதம்!

தென்காசி: ஜம்முவில் உயிரிழந்த தமிழ்நாடு ராணுவ வீரரின் உடல் சொந்த ஊர் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஜம்முவில் உயிரிழந்த தமிழ்நாடு ராணுவ வீரர்
ஜம்முவில் உயிரிழந்த தமிழ்நாடு ராணுவ வீரர்

By

Published : May 6, 2020, 11:33 AM IST

ஜம்மு காஷ்மீர் பகுதியில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தமிழ்நாடு வீரர் சந்திரசேகர் வீர மரணம் அடைந்தார். இவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த மூன்று வாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர். சந்திரசேகருக்கு ஜெனி என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

சந்திரசேகரின் மறைவைக் கேட்டு அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். டெல்லியிலிருந்து விமானம் மூலம் சந்திரசேகரின் உடல் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து ராணுவ வாகனம் மூலம் சொந்த ஊரான செங்கோட்டைக்கு எடுத்து வரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் நடைபெற்றன.

நேற்று மாலையே சந்திரசேகர் உடல் சொந்த ஊருக்கு வந்துவிடும் என்ற தகவல் வெளியானதால் அவரது உறவினர்கள், ஊர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தயாராக இருந்தனர். ஆனால், உடல் வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட்டது. அதன்படி நேற்று நள்ளிரவுக்குள் உடல் கொண்டு வரப்படும் என்று அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தற்போதுவரை சந்திரசேகரின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்து வரப்படவில்லை. இதனால் அஞ்சலி செலுத்துவதற்காக விடிய விடிய காத்திருந்த உறவினர்கள், பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். இதற்கிடையில் தற்போதுவரை அவரது உடல் டெல்லியிலிருந்து அனுப்பப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. தனி விமானம் என்பதால் விமானம் ஏற்பாடு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சந்திரசேகர் உடல் சொந்த ஊர் வந்து சேர இன்று இரவு ஆகும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சென்னை காவல் ஆணையரைப் பாராட்டிய ராணுவ அதிகாரி

ABOUT THE AUTHOR

...view details