தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாடார் சங்க விழாவில் ஆளுநர் தமிழிசை; நுங்குவண்டியும் ஓட்டியதால் சுவாரஸ்யம் - Puducherry Deputy Governor Tamilisai

தென்காசியில் காமராஜர் அரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்றுள்ளார்.

நாடார் சங்க விழாவில் ஆளுநர் தமிழிசை; நுங்குவண்டியும் ஓட்டியதால் சுவாரஸ்யம்
நாடார் சங்க விழாவில் ஆளுநர் தமிழிசை; நுங்குவண்டியும் ஓட்டியதால் சுவாரஸ்யம்

By

Published : Dec 4, 2022, 10:27 PM IST

Updated : Dec 4, 2022, 11:04 PM IST

தென்காசி:சுரண்டையில் காமராஜர் அரங்கம் திறப்பு விழா, நாடார் வாலிபர் சங்கம் 33ஆவது ஆண்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், பாஜக மாநில துணைத்தலைவர் கருணாகரன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பனை மரங்களால் செய்யப்பட்ட நுங்கு வண்டி, பனை பெட்டி, அலங்கார பொருட்கள் உள்ளிட்டவைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனைப் பார்த்த ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆர்வமுடன் குழந்தையாக மாறி நுங்கு வண்டி ஓட்டினார்.

மேலும் அலங்கார பொருட்களைக் கண்டு மகிழ்ந்தார். இதனைத்தொடர்ந்து மேடையில் பேசிய அவர், தங்களின் ஒருவராக இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாகவும்; ஆனால், தான் ஆளுநர் என்பதால் காவல் துறையின் கெடுபிடிகள் பொதுமக்களிடம் அதிகமாக இருந்திருந்தால் மன்னித்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் காமராஜர் வழியில் இருந்ததால் தான், தான் இந்த இடத்தைப் பெற்றுள்ளதாகவும்; கூடவே வெற்றிக்கு மூன்று ரகசியம் உள்ளதாகவும் அவை மூன்றும் உழைப்பு, உழைப்பு உழைப்பு மட்டுமே எனக்கூறினார். இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

நாடார் சங்க விழாவில் ஆளுநர் தமிழிசை; நுங்குவண்டியும் ஓட்டியதால் சுவாரஸ்யம்

இதையும் படிங்க:ஏடிஎம் மூலம் தங்கம் வாங்கலாம்.. சிறப்பம்சங்கள் என்ன?

Last Updated : Dec 4, 2022, 11:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details