தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தமிழ்நாடு விடுதலைக் களப் பெண்கள் வாக்கு சேகரிப்பு! - Tenkasi election news

தென்காசி: தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பாவிற்கு ஆதரவாக, தமிழ்நாடு விடுதலைக் களத்தைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தமிழ்நாடு விடுதலைக் களப் பெண்கள் வாக்கு சேகரிப்பு
அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தமிழ்நாடு விடுதலைக் களப் பெண்கள் வாக்கு சேகரிப்பு

By

Published : Mar 30, 2021, 6:21 PM IST

தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தில் உள்ள ஏழு உள்பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக்கோரி அச்சமூக மக்கள், அமைப்புகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தேவேந்திரகுல வேளாளர் மக்கள் அதிமுகவுக்கு ஆதரவு

இந்நிலையில் மாநில அரசு பரிந்துரையின்படி, தேவேந்திரகுல வேளாளர் என பொதுப்பெயரிட்டு அழைக்க மத்தியில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அச்சமூக மக்கள் அதிமுகவுக்கு ஆதரவாக நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, இன்று (மார்ச். 30) தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் பொதுமக்களைச் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தமிழ்நாடு விடுதலைக் களப் பெண்கள் வாக்கு சேகரிப்பு

தமிழக விடுதலைக் களப் பெண்கள்

இந்நிலையில் செங்கோட்டை அருகே உள்ள தெற்கு மேடு பகுதியில் தமிழக விடுதலைக் களம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், அதிமுகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் தங்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியதையடுத்து, அதிமுக வெற்றிக்காக உறுதுணையாக செயல்படுவதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'அடுக்கு மொழியெல்லாம் இல்லை ஆபாச மொழிதான் - பரப்புரைக்கு நேர்ந்த பரிதாபம்'

ABOUT THE AUTHOR

...view details