தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 23, 2020, 5:29 PM IST

Updated : Sep 23, 2020, 10:37 PM IST

ETV Bharat / state

தமிழ்ப் புலிகள் கட்சியினர் வேளாண் சட்ட மசோதாக்கள் நகல் எரிப்பு போராட்டம்

தென்காசி: தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்ப் புலிகள் கட்சியினர் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்ட மசோதாவைக் கண்டித்து சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tamil puligal party protest against farm bills
வேளாண் சட்ட மசோதாக்கள் நகல் எரிப்பு போராட்டம்

வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல்செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

மத்திய அரசு கொண்டுவந்த இந்த வேளாண்மைச் சட்ட மசோதாக்களுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

இதேபோல் இந்த மசோதாக்களுக்குத் தமிழ்ப் புலிகள் கட்சியினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் குமார், சந்திரசேகர் ஆகியோர் தலைமையில், இந்தச் சட்ட மசோதாவானது விவசாயிகளுக்கு எந்த நன்மையும் அளிக்காது எனவும், இது வேளாண்மைக்கு எதிராக அமைந்துள்ளது எனவும் கூறி, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

பின்னர், சுமார் 30-க்கும் மேற்பட்டோர் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: நெல்லையில் திமுக பிரமுகரை தாக்கிய விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு

Last Updated : Sep 23, 2020, 10:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details