தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் இயங்கும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், "தகவல் தொழில்நுட்பத்தில் கிராமப்புற இளைஞர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்ற முயற்சியில் ஜோஹோ (zoho) என்னும் தனியார் மென்பொருள் நிறுவனம் செயல்பட்டுவருகிறது.
தகவல் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா, கலிஃபோர்னியாவில்தான் வேலைவாய்ப்பு என்ற நிலையை மாற்றி இங்கிருந்து அந்த வேலைகளைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. அதற்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும்.