தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை பகுதியில் காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவைத் தேர்தல் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தலைவர் பழனி நாடார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது"பொருளாதாரக் கொள்கை குறித்து காங்கிரஸ் கட்சிக்குத் தெரிந்த அளவு கூட பா.ஜ.,வுக்குத் தெரியாது. மோடிக்குப் பொருளாதாரக் கொள்கை தெரியாததன் காரணமாகவே வரலாறு காணாத பெட்ரோல் விலையேற்றம் நடந்துள்ளது.
'அதிமுக முதுகில் பாஜக எனும் அழுக்கு மூட்டை' கே.எஸ்.அழகிரி - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி
தென்காசி: அதிமுக முதுகில் பாஜக எனும் அழுக்கு மூட்டை இருப்பதால்தான் அதிமுகவால் வேகமாக நடக்க முடியவில்லை, இதுவே அதிமுக கட்சியின் வீழ்ச்சியாகும் என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுவே ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் உள்ள வித்தியாசம். அதிமுகவின் வீழ்ச்சி என்பது பா.ஜ., கட்சியால் தான் ஏற்படும். அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்றால் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கணிசமான வாக்குகளைப் பெற முடியும். அந்தவகையில், அதிமுக முதுகில் பாஜக எனும் அழுக்கு மூட்டை இருப்பதால் அதிமுகவால் வேகமாக நடக்க முடியவில்லை.
அதிமுக அரசு சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறுவதற்காகவே குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்களின் வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளது என்றார்.