தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசியில் கரும்பு விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டம்! - Tenkasi District News

தென்காசி: சர்க்கரை ஆலை நிறுவனத்திடமிருந்து கரும்புக்கான நிலுவை தொகையை பெற்றுதரக்கோரி கரும்பு விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கரும்புடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசியில் கரும்பு விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் கரும்பு விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டம்

By

Published : Oct 8, 2020, 10:46 PM IST

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள தரணி சர்க்கரை ஆலையில் கரும்பு கொள்முதல் செய்ததற்கு விவசாயிகளுக்கு கொடுக்க
வேண்டிய ரூபாய் 24 கோடியை ஆலை நிர்வாகம் இன்னும் விவசாயிகளுக்கு வழங்கவில்லை.

இது குறித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் மாவட்ட ஆட்சியர் மூலம் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால் ஆலை நிர்வாகமானது தற்போது வரை பணத்தை விவசாயிகளுக்கு வழங்கவில்லை.

எனவே விவசாயிகளுக்கு உரிய பணத்தை பெற்று தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தென்காசி மாவட்ட கரும்பு விவசாயிகள் கையில் கரும்புடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியரிடம், விவசாயிகள் இது தொடர்பாக மனு ஒன்றினை அளித்தனர். மேலும் வரும் 20ஆம் தேதிக்குள் நிலுவை தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். அதன் பின்னரே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்!

ABOUT THE AUTHOR

...view details