தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலுவைத் தொகை கேட்டு இரண்டு நாளாக காத்திருப்பு போராட்டம்! - farmers protest in tenkasi

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கரும்புக்கான நிலுவைத் தொகை கேட்டு விவசாயிகள் தொடர்ந்து இரண்டு நாள்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்
காத்திருப்பு போராட்டம்

By

Published : Oct 13, 2020, 10:36 PM IST

தென்காசி மாவட்ட சர்க்கரை ஆலைகளில் கோடிக்கணக்கான ரூபாய் கரும்பு நிலுவைத் தொகை உள்ளதாகவும், அதனை விரைவில் வழங்க வேண்டும் எனவும் கூறி கரும்பு விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று (அக். 12) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். அதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்புடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் உணவு சமைத்து எதிர்ப்பை பதிவுசெய்தனர்.

அதன் இரணடாம் நாளான இன்று (அக்.13) சட்டை அணியாமல் அரை நிர்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதில் இந்த மாத இறுதிக்குள் நிலுவைத் தொகைப் பெற்றுத்தரப்படும் எனவும், இல்லையெனில் வருவாய் வசூலிப்பு சட்டத்தின் கீழ் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்திரவாதம் அளித்தார். அதனடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க:புதுச்சேரியில் பள்ளிகளை மூடக்கோரி போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details