தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை கேட்டு விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டம்

தென்காசி: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டாம் நாளாக இன்று கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை கேட்டு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் அரை நிர்வாணப் போராட்டம் நடைபெற்றது.

விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டம்
விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டம்

By

Published : Oct 13, 2020, 2:01 PM IST

தென்காசி மாவட்ட சுற்றுவட்டார கரும்பு விவசாயிகளிடம் சர்க்கரை ஆலைகள் கரும்பை பெற்றுக் கொண்டு கோடிக்கணக்கான நிலுவைத் தொகையை இரண்டு வருடங்களாக வழங்காமல் ஏமாற்றிவருகிறது. இதனைக் கண்டித்து கரும்பு விவசாயிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நேற்று (அக.12) தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்புடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டம்

பின்னர் விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதில் சுமுக நிலை ஏற்படாத காரணத்தால் விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்திலேயே உணவு சமைத்து தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்நிலையில் இன்று (அக.13) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கரும்புக்கான நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கும் வரை போராட்டத்தை தொடருவோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: “விவசாயிகள், தேர்தல் நேரத்தில் முதுகெலும்பு; மற்ற நேரத்தில் அடிமைகளா?” அய்யாக்கண்ணு கேள்வி

ABOUT THE AUTHOR

...view details