தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசியில் 3ஆவது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தால் தற்கொலை

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

தென்காசி மாவட்டத்தில் நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி தற்கொலை
தென்காசி மாவட்டத்தில் நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி தற்கொலை

By

Published : Sep 2, 2022, 11:52 AM IST

Updated : Sep 5, 2022, 10:29 PM IST

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள குலசேகரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது 54). இவருடைய மனைவி வெண்ணியார் (48). இவர்களுக்கு ராஜலட்சுமி (21) என்ற மகள் இருந்தார். ராஜலட்சுமி பிளஸ் 2 முடித்துவிட்டு, மருத்துவ படிப்பில் சேருவதற்காக கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதினார். இரண்டு முறையும் தோல்வி அடைந்ததால், சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்று 3ஆவது முறையாக நீட் தேர்வு எழுதினார். இந்த தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ஆம்‌ தேதி வெளியாக உள்ளன.

இதனிடையே நீட் தேர்வுக்கான விடைக்குறிப்புகளும் வெளியிடப்பட்டன. அன்றிலிருந்து ராஜலட்சுமி வருத்தத்துடன் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் ராஜலட்சுமியின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தென்காசியில் 3ஆவது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தால் தற்கொலை

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. குறிப்பாக நீட் தேர்வு முடிவுகளின்போது மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். இதில் அரசு தனி கவனம் செலுத்தி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க நவடிக்கைஎடுக்க வேண்டும் என்று கல்வியலாளர்களும், மனநல மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர்.

நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி தற்கொலை

இதையும் படிங்க: 'முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை?' - எல். முருகன்

Last Updated : Sep 5, 2022, 10:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details