தென்காசி:குற்றால சீசன் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதால் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை என்பது சற்று அதிகரித்தே காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக குற்றாலத்தில் தண்ணீர் வரத்து குறைந்து வந்த நிலையில், தற்போது தினசரி சாரல் உடன் மழை பெய்து வருவதால் குற்றாலம் தற்போது மேலும் களைகட்டி வருகிறது. குற்றால சீசன் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாத காலமாகியும், தற்போது வரை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது குறிப்பிடத்தக்கது.
குற்றாலத்திற்கு தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தது மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினசரி சுற்றுலாப் பயணிகள் வருவதால் இங்கு உள்ள அதிகப்படியான ஹோட்டலில் உணவு உண்ணுவதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர். இங்குள்ள ஹோட்டல்களில் முறையான உணவுகள் இல்லாததால் கெட்டுப்போன சிக்கன், மட்டன் உள்ளிட்ட பொருள்களை வைத்து உள்ளதாக தகவல் வந்து உள்ளது.
இதனை அடுத்து உடனடியாக அந்த பகுதி முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குற்றாலத்தில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் தென்காசி, பாவூர்சத்திரம் மற்றும் குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் பிரபலமான தனியார் ஹோட்டல்கள் செயல்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:Tenkasi: கடையம் அருகே குழாய் உடைந்து சாலையில் வீணாக கசிந்த தண்ணீர்!