தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தங்க புதையல் கிடைத்ததாக கூறி மோசடி; பல லட்சங்களை அபேஸ் செய்யவிருந்த இரு வடமாநிலத்தவர் கைது! - Scam

Tenkasi North Indian Scam: பழகிய சில நாட்களிலேயே தங்­கப்­ பு­தை­யல் கிடைத்­த­தா­கக் கூறி அரிசி கடை உரி­மை­யா­ள­ரி­டம் இருந்து ரூபாய் 5 லட்­சம் பணத்தை அபேஸ் செய்யவிருந்த வடமாநிலத்தை சேர்ந்த 2 நபர்களை சிவகிரி காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கப் புதையல் கிடைத்தாக கூறி இரு வடமாநிலத்தவர் மோசடி
தங்கப் புதையல் கிடைத்தாக கூறி இரு வடமாநிலத்தவர் மோசடி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2023, 1:06 PM IST

தங்கப் புதையல் கிடைத்தாக கூறி இரு வடமாநிலத்தவர் மோசடி

தென்காசி: சிவகிரியில் அரிசி கடை நடத்தி வருபவர் தங்கராஜ் (37). கடந்த 20 நாட்களாக வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் தங்கராஜ் உடன் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் இரு வடமாநில நபர்களும் தங்கராஜிடம், தங்களுக்கு புதையல் கிடைத்ததாகவும் அதில் இரண்டு கிலோ தங்க தோரணங்கள் இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

மேலும், கிடைத்த தங்க தோரணங்களை வேறு யாரிடமும் கொடுக்க முடியாததால் நன்றாக பழகிய தங்களிடம் தருகிறோம் எனவும் எங்களுக்கு அவசரமாக 5 லட்சம் ரூபாய் தேவை படுவதால் தங்கத்தை வைத்து கொண்டு பணம் கொடுங்கள் என கேட்டுள்ளனர்.

இந்நிலையில் கிடைக்கப்பெற்ற தங்கத்தில் இருந்து இரண்டு குண்டு மணி அளவிலான தங்கம் மாதிரியை தங்கராஜிடம் கொடுத்து, இருவரும் 2500 ரூபாய் முன்பணமாக பெற்றுள்ளனர். பின்னர், இருவரின் செயல்களில் சந்தேகம் அடைந்த அரிசி கடை தங்கராஜ் சிவகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி வட மாநில நபர்களை பிடிப்பதற்கான தீவிர நடவடிக்கை மேற்கொண்டார். பின்னர், தங்கராஜ் இருக்கும் இடத்திற்கு இருவரையும் வரவழைத்த காவல் துறையினர் அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்த தங்க முலாம் பூசப்பட்ட போலி நகையை பறிமுதல் செய்தனர்.

பின்பு, அவர்களை சிவகிரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இருவரும் குஜராத் மாவட்டம் அமதாபாத் டக்கர் நகர் பகுதியைச் சேர்ந்த சுனில் (43) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கிஷன் (63) என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும், கடந்த 20 நாட்களுக்கு முன்பாக கடையநல்லூர் பகுதியில் கூடாரம் அமைத்து குடும்பத்துடன் அவர்கள் தங்கி இருந்ததும், கடந்த பத்து ஆண்டுகளாக இதைப் போல கேரளா, கர்நாடகா, ஆந்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இதே யுக்தியை பயன்படுத்தி இலட்சக்கணக்கில் மோசடி செய்து பணம் பறித்ததும் தெரிய வந்துள்ளது.

பின்னர், காவல் துறையினர் அவர்கள் குடும்பத்தோடு தங்கி இருந்த கடையநல்லூர் பகுதிக்கு சென்று பார்கையில் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்துள்ளது. பின், சம்பவ இடத்திற்கு வந்த புளியங்குடி துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் காவல்துறையினரை பாராட்டியதுடன், “இதைப்போல புதையல் எனக் கூறி வெளிமாநிலங்களிலிருந்து வரக்கூடிய நபர்களிடம் ஏமாந்தவர்கள் புகார் அளிக்காமல் இருந்து விடுகின்றனர்.

அதை அவர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பத்து வருடங்களாக போலீஸிடம் சிக்காமல் இருந்துள்ளனர்.
அதைப்போல் இல்லாமல் பொதுமக்கள் தைரியமாக சந்தேகப்படும்படியான இத்தகைய நபர்களைக் கண்டறிந்தால் உடனடியாக உள்ளூர் காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், பொதுமக்கள் இத்தகைய வெளிமாநில ஆசாமிகளுடன் ஏமாற வேண்டாம். பொதுமக்க்ளின் ஒத்துழைப்பு காவல்துறைக்கு கண்டிப்பாக வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க:எதிர்பாராத விதமாக ஆம்னி வேனில் கிளம்பிய புகை.. நொடியில் எலும்புக்கூடான வேன்…பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

ABOUT THE AUTHOR

...view details