கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக, தனிக் கடைகள் திறக்கலாம், வாகனங்களில் குறிப்பிட்ட நபர்கள் வரை செல்லலாம் போன்ற பல்வேறு வழிமுறைகளை அரசு அறிவித்திருந்தது.
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மெக்கானிக் கடை, சைக்கிள் கடை, ஃபேன்சி ஸ்டோர், ஸ்வீட் கடை உள்ளிட்ட பல்வேறு தனிக்கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. இதனால், மக்கள் வழக்கம்போல் சாலையில் நடமாடி பொருள்களை வாங்கிச் சென்றனர்.
இந்நிலையில், தென்காசியில் புளியங்குடி பகுதியில் நேற்று ஒரே நாளில் ஒன்பது பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டம் மீண்டும் சிவப்பு மண்டலத்தில் இணைந்துள்ளது.