தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடைக்குள் புகுந்த மர நாய்; போராடி விரட்டிய தந்தை, மகன்! - வீரட்டியடித்த தந்தை, மகன்

தென்காசி: கடையம் அருகே மரக்கடைக்குள் புகுந்த மர நாயை, அக்கடையின் தொழிலாளர்களான தந்தையும் மகனும் 3 மணி நேரம் போராடி விரட்டினர்.

Shoplifting weasel; Father and son chased away!
Shoplifting weasel; Father and son chased away!

By

Published : Jul 12, 2020, 7:58 AM IST

தென்காசி மாவட்டம், கடையம் வனப்பகுதியிலுள்ள வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களையும், மக்களையும் அச்சுறுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் கல்லிடைக்குறிச்சிப் பகுதியில் முருகேசன் என்பவருக்குச் சொந்தமாக மரக்கடை உள்ளது.

மரக்கடை என்பதால் பயன்பாட்டிற்காக மரச்சாமான்களை அடுக்கி வைத்துள்ளார். இந்நிலையில் வனப்பகுதியிலிருந்து ஊருக்குள் புகுந்த மர நாய், மரக்கடையின் மரச்சாமான்களுக்கு இடையே சென்று மறைந்துள்ளது. இதைக்கண்ட மரக்கடையின் தொழிலாளர்களான தந்தை, மகன் இருவரும் மர நாயை விரட்ட முயன்றுள்ளனர்.

இதனையடுத்து சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி, மர நாயை விரட்டினர். வனப்பகுதியிலிருந்து மர நாய் கடைக்குள் புகுந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details