தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செங்கோட்டை நகர்மன்ற கூட்டம் 2வது முறையாக ஒத்திவைப்பு..! - today latest news in tamil

Sengottai Municipality: செங்கோட்டை நகர் மன்ற கூட்டத்தில் சேர்மனை கண்டித்து அதிமுக, பாஜக உட்பட எந்த கவுன்சிலர்களும் பங்கேற்காத நிலையில் கூட்டத்திற்குக் கோரம் இல்லை என 2வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

Shenkottai City Council meeting adjourned
செங்கோட்டை நகர்மன்ற கூட்டம் 2வது முறையாக ஒத்திவைப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 7:08 PM IST

செங்கோட்டை நகர்மன்ற கூட்டம் 2வது முறையாக ஒத்திவைப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி 24வது வார்டுகளை உள்ளடக்கியது. இதில் 10 அதிமுக கவுன்சிலர்களும், 4 பாஜக கவுன்சிலர்களும், 10 திமுக கூட்டணி கவுன்சிலர்களும் உள்ளனர். நகர மன்ற தலைவியாக திமுகவைச் சேர்ந்த ராமலக்ஷ்மி இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நகர்மன்ற தலைவி வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை, வளர்ச்சித் திட்டத்தில் பங்களிப்பு முழுமையாகத் தரவில்லை என கவுன்சிலர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை எழுப்பி வந்தனர். கடந்த மாதம் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த 4 கவுன்சிலர்கள் மட்டும் பங்கேற்ற நிலையில் கூட்டத்திற்குக் கோரம் இல்லாததால் ஒத்திவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று (நவ 16) சாதாரண கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கூட்டத்திலும் திமுக உட்பட எந்தவித கவுன்சிலர்களும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மேலும், வருகை பதிவேட்டில் திமுக நகர மன்ற தலைவி உட்பட யாரும் கையெழுத்து இடாத காரணத்தினால் இந்த கூட்டத்திற்கும் கோரம் இல்லை என ஆணையாளர் கூட்டத்தை ஒத்தி வைத்ததாக அறிவித்தார்.

செங்கோட்டை நகர் மன்ற கூட்டத்தில் சேர்மனை கண்டித்து அதிமுக, பாஜக உட்பட எந்த கவுன்சிலர்களும் பங்கேற்காத நிலையில் கூட்டத்திற்குக் கோரம் இல்லை என 2வது முறையாக ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அதிமுக கவுன்சிலர்கள் கூறுகையில், "நகர மன்ற தலைவி அதிகாரப் போக்கில் செயல்பட்டு மக்களின் வளர்ச்சி திட்டத்தில் பங்களிப்பைச் செலுத்தவில்லை ஆகவே அவர் பதவி விலக வேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் பாஜக தரப்பினர் கூறுகையில், "மக்களின் குறைகளைப் பலமுறை சொல்லியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரையில் நடைபெற்ற 5 கூட்டத்திலும் கேட்ட கேள்விகளுக்கு முறையான பதில் வழங்கவில்லை. மேலும், அஜந்தா முறையாக வழங்கப்படாததினாலும் இந்த கூட்டத்தைப் பாரதிய ஜனதா கட்சி சார்பில் புறக்கணித்துள்ளோம்" என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில் செங்கோட்டை நகர்மன்ற கூட்டம் நடைபெறாமல் இரண்டாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டதால் சிறிது நேரம் செங்கோட்டை நகராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

இதையும் படிங்க:நவ.18ல் சட்டமன்ற சிறப்பு கூட்டம்.. ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் திருத்தமின்றி மீண்டும் நிறைவேற்றம்: சபாநாயகர் அப்பாவு தகவல்!

ABOUT THE AUTHOR

...view details