தென்காசி மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் புதிய தேசிய கல்விக் கொள்கையை கைவிடக் கோரியும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை கைவிட வேண்டும், கிரிமினல் சட்டத்தில் திருத்தம் செய்வதை கைவிட வலியுறுத்தியும் துண்டு பிரசுரம், சுவரொட்டி, சமூக வலைதளம் வாயிலாக கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
புதிய தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர் - தென்காசி மாவட்ட செய்திகள்
தென்காசி : கடையநல்லூரில் புதிய தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
sdpi protest in Tenkasi
அதன்படி, நேற்று (செப்.2) கடையநல்லூர் அருகே மணிக்கூண்டு பகுதியில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக முழுக்கங்களை எழுப்பி மாவட்ட செயளாளர் ஷேக் ஜிந்தா தலைமையில் 60க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.