தென்காசி: கடையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து கனிமவளங்கள் தினமும் ஆயிரக்கணக்கான ராட்சத லாரிகளில் கேரளாவிற்குக் கொண்டு செல்லப்படுகிறது. இதனைத் தடுக்க சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் கடையம் சின்னத்தேர் திடலில் இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
இந்தநிலையில் கீழ கடையம் ஊராட்சி தலைவர் பூமிநாத் மகன் அஸ்வின் சுபநாத் (LKG) மற்றும் அவரது தம்பி சந்திரசேகர் மகள்கள் 6 -ம் வகுப்பு படிக்கும் சுப பிரியங்கா, 4 -ம் வகுப்பு படிக்கும் சபிதா ஆகிய 3 பேரும் கடந்த சில தினங்களாக பூமிநாத் மற்றும் சந்திரசேகர் கனிம வள கொள்ளையைக் கண்டித்து போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.