மதுரை:தென்காசி அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த எஸ்.ஆறுமுகம், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ’தங்கள் மகன் சீனு, அரியநாயகிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் சீனுவை சில ஆசிரியர்கள் சாதிய ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார். கடந்தாண்டு அக்டோபர் 14-ம் தேதி காலையில் சீனு பள்ளிக்குச் சென்றான். பகல் 11.30 மணியளவில் வீட்டில் தூக்கில் சீனுவின் சடலம் தொங்கியபடி இருந்தது.
சேந்தமரம் போலீஸார் எஸ்டி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யாமல் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். இதனால் சிபிசிஐடி விசாரணைகோரி உயர் நீதிமன்றக்கிளையில் மனு தாக்கல் செய்ததாகவும், அந்த வழக்கில் வழக்கை விசாரிக்க டிஎஸ்பியை விசாரணை அதிகாரியாக நியமிக்க தென் மண்டல ஐஜிக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டும் விசாரணை முறையாக நடைபெறவில்லை’ என மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார்.