ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசியில் பள்ளி மாணவர்கள் சாலை மறியல் - student protest

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வல்லராமபுரம் கிராமத்தில் குறித்த நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படாததை கண்டித்து பள்ளி மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தங்கள் கிராமத்திற்கு பேருந்துகள் இயக்கப்படாததை கண்டித்து பள்ளி மாணவ மாணவிகள் சாலை மறியல்
தங்கள் கிராமத்திற்கு பேருந்துகள் இயக்கப்படாததை கண்டித்து பள்ளி மாணவ மாணவிகள் சாலை மறியல்
author img

By

Published : Jun 25, 2022, 5:18 PM IST

தென்காசி: சங்கரன்கோவில், வல்லராமபுரம் கிராம மாணவ, மாணவிகள் அரசு பேருந்துகள் மூலம் பள்ளிக்கு சென்று படித்துவருகின்றனர்.
இந்த நிலையில், சங்கரன்கோவில் பேருந்து நிலையத்திலிருந்து வந்துசெல்லும் பேருந்துகள் வல்லராமபுரம் கிராமத்திற்குள் செல்லாமல், பிரதான சாலையிலேயே செல்கின்றன.

இதனால் வல்லராமபுரம் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துவந்தனர்.இந்த நிலையில், இன்று (ஜூன் 25) பள்ளி மாணவ, மாணவிகள் 20க்கும் மேற்பட்டோர் சங்கரன்கோவில்-சுரண்டை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த சேர்ந்தமரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சு வார்த்தை நடத்தி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் மறியல் கலைக்கப்பட்டது.

இதையும் படிங்க: தென்காசியில் 'ஸோகோ' மென்பொருள் நிறுவன விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி!

ABOUT THE AUTHOR

author-img

...view details