தென்காசி: பண்பொழி திருமலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (பிப்.5) வந்திருந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "பிப்ரவரி 8ஆம் தேதி சசிகலா சென்னைக்கு வரவுள்ள நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது.
வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் சசிகலா நிச்சயமாக போட்டியிடுவார். அவ்வாறு, போட்டியிடும் பட்சத்தில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு செய்வார். சசிகலா வாகனத்தில் அதிமுக கட்சிக் கொடியைப் பயன்படுத்தும் விவகாரத்தில் டிஜிபி அல்ல முப்படைத் தளபதியிடம் புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய இயலாது.