தென்காசி: சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை திருநெல்வேலி சாலையில் அமைந்துள்ளது . இந்த மருத்துவமனைக்குச் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பேர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பல அறுவை சிகிச்சைகள் செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று (ஆகஸ்ட் 27) தைராய்டு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர் சங்கரன்கோவில் அரசு மருத்துவர்கள்.
சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும்பாலான பொதுமக்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு வருவது வழக்கம் மேலும், சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதியில் பொருத்த அளவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகள் அதிகமாகவே உள்ளன. இங்கு வசிக்கக்கூடிய பொதுமக்களும் அதிகப்படியான வருமானமின்றி விவசாய தொழிலையே நம்பி வாழக்கூடிய மக்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
இதில் ஒரு பகுதியாக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் திருநெல்வேலி தலைமை மருத்துவமனைக்கு ஈடு இணையாக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையிலும் பல சிகிச்சைகள் செய்து வெற்றி சாதனை படைத்துள்ளனர். மேலும் இங்கு மேற்கொள்ளப்படும் சிறப்பு அறுவை சிகிச்சைகள் குறித்து தலைமை குடிமை மருத்துவர் டாக்டர் செந்தில் சேகர், மருத்துவர்கள் ஜப்சீர், செல்வ சரவணன் ,ஜெயபாஸ்கர், ராணி ஸ்ரீகுமார் ,அர்ச்சனா, பாலசுப்ரமணியன் ஆகிய மருத்துவ குழுவினர் தெரிவித்ததாவது.
“சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தைராய்டு, குடலிறக்கம் , கடுமையான எலும்பு முறிவு, மார்பக புற்றுநோய் கட்டி அகற்றல், ஹீமோதெரபி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ அறுவைசிகிச்சைகள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.